Monday, March 26, 2007

கோமாளித்தனமும் ஏமாளித்தனமும் கையாளாகாததனமும்

ஊர் உலகுக்கு எல்லோருக்கும் தெரியும் அமெரிக்காவின் நோக்கம் ஈராக்கில் நுழைந்த விசயம்.

அமெரிக்காவின் கோமாலித்தனமும்
ஈராக்கின் ஏமாளித்தனமும்
UN கையாலாகாததனமும்

இத்தனையும் ஒவ்வொரு நாளும் அரங்கேறிக் கொண்டு தான் இருக்கிறது.

இதுவாக தான் உண்மையாக இருக்க முடியும். அமெரிக்காவின் இந்த கோமாளித்தனம், நேர்மையாகவே தெரிகிறது, ஒரு சில சமூகத்தினர்க்கு விடுதலை வாங்கி கொடுத்ததாக...மறைமுகமாக ஈராக்கின் எண்ணெய் வளத்தை பயன்படுத்திக் கொண்டாலும்.

ஈராக்கின் இந்த ஏமாளித்தனம், நல்லதற்காகவே தெரிகிறது, சந்தோசம் ஒரு சில கொடும்பாவிகளை அழித்ததற்காக, மறைமுகமாக பொதுமக்களின் உயிரும் எண்ணை வளமும் இழக்க நேரிட்டாலும்

UN இந்த கையாளாகாததனமும், நல்லதற்காகவே தெரிகிறது, தன்னால் எடுக்கு முடியாத முடிவை, அமெரிக்கா எடுத்தற்க்காக....மறைமுகமாக UN அதன் மதிப்பை இழக்க நேரிட்டாலும்.


இப்படிபட்ட கோமாளித்தனமும், ஏமாளித்தனமும், கையாளாகாததனமும் தொடருமேயானால், இந்த உலகில் இது போன்ற கோமாளித்தனமும், ஏமாளித்தனமும், கையாளாகாததனமும் இன்னமும் நிறையவே உருவாகும் என்பதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை

இன்னும் பல
அமெரிக்காவை போல
ஈராக்கை போல
UN போல

என்னை பொருத்தவரையில் மூன்று பேரும் செய்தது சரியாகவே படவில்லை. லாபத்தை விட நக்ஷ்டமே அதிகம் எல்லோருக்கும்.

Saturday, March 24, 2007

என் முதல் கண்

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே! என் பார்வை இந்த உலகின் மீது!!