Friday, April 13, 2007

கேவலமா இருக்கு

ஒரு தனி பட்ட மனிதனை பற்றியது. தனிபட்ட மனிதர்களை பற்றி பேச எனக்கு தகுதி இல்லை மனித நாகரிகத்தை நாம் கையில் எடுத்துகொண்டு பேசும்போது ...இருந்தாலும் என் நோக்கம் இது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்கவும், புரியாதவர்கள், தெரிந்து கொள்ளவும் ஒரு சந்தர்ப்பம் - இது ஒரு செய்தியாகவே இருக்கட்டும் என்று.


இது அட நம்ம ஐஸ் பற்றியும், அபிஷ்சேக் பற்றியும். நிறைய கேள்விகளும் சந்தேகங்கலும் மனதில் எழுகின்றன. ஐஸ் இதற்கு முன்னாடி ரெண்டு மூன்று பேரை காதலித்து... இருக்கிறார் என்று.

இப்படி இருக்கையில், எப்படி அபிசேக் - ஆல் ஒத்து கொள்ள முடிகிறது காதலையும் சரி, கல்யாணமும் சரி. இந்திய மக்களும்(?), ரசிகர்களும், அவர் மீதும், அமிதாப்பச்சன் குடும்பத்தின் மீது வைத்து இருக்கும் மதிப்பு என்ன வாகும்?,

இல்லை வாய் கிழிய பேசும் சிலரின் இந்திய கலாச்சாரம் , பண்பாடு ....என்ன வாகும், அது சரியா.?

இல்லை அபிசேக் மட்டும் என்ன இதற்கு முன்னே யாரையும், "காதலிக்க" வில்லையா? என் கேள்வி எழ தான் செய்கிறது.

இல்லை உண்மையிலேயே ரசிகர்களும் , மற்றவர்களும் இதை பற்றி கவலை படுகிறார்களா?

இந்த காதல் உள்ளங்களின் எண்ணம் தான் என்ன?
-இது என்ன புகழுக்காகவா?
-இல்லை பணத்துக்காகவா
-இல்லை அழகுக்காகவா
-இல்லை ஆசைக்காகவா
-இல்லை இனம் புரியாத உணர்வுகளுக்காகவா?

எது எப்படியாக இருந்தாலும் அவர்களின் முடிவுகள் தனிபட்டவையாக இருந்தாலும் , இப்படி பட்ட சம்பந்தங்கள் சரியாதனவாகவே படவில்லை. இவர்கள் கடந்த காலங்களை பற்றி கவலை பட்டதாக , கணக்கில் எடுத்து கொண்டதாக தெரிய வில்லை. இவர்களை ஒரு உதாரணத்திற்க்கே எடுத்து கொண்டு இருக்கிறேன், இவர்களை பற்றி எல்லோருக்கும் தெரியும் என்பதால். இவர்களை போன்று எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள். இது எல்லாம் ஒரு பொருட்டாகவே பட வில்லை.

என்னை பொருத்தவரையில் நல்ல கண்ணோட்டத்தில் பார்த்தாலும் சரி, தப்பான கண்ணோட்டத்தில் பார்த்தாலும் சரி, சில விசயங்கள் தப்பானவைகள் என்றால், தப்பு தான் இந்திய கலாசாரத்தையும், மனித நாகரிக்கத்தையும் மனதில் நினைக்கும் போது.

இங்கு நான் காதல் என்று சொல்லி இருப்பது மரியாதை நிமத்தமாகவே அந்த வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறேன்.

இதை எல்லாம் சொல்ல எனக்கு கேவலமாக இருக்கிறது. இது எல்லாம் ஒரு பொழப்பா என தோணுது

Saturday, April 7, 2007

என்னிடம் மட்டும் அதிகாரம் இருந்தால்

என்னிடம் மட்டும் அதிகாரம் இருந்து இருந்தால், இது தான் செய்து இருப்பேன் இந்த நேரத்தில். உலகம் பூரா உள்ள நியுஸ் பேப்பர்களிலும் வெப்சைட்டுகளிலும் "war against terror". இராகில் நடந்தது "war against terrorist" -ஆ. தன் தகப்பனின் தோழ்விக்கு பலி வாங்க இராக் மீது போரை தொடுத்தார் புஷ். Saddam-ஐ கொல்ல இராக் மக்களை ஏன் கொல்கிறார்கள்?

இராகில் நடந்து வரும் குண்டு வெடிப்புகளும் , கொலைகளும் தீவரவாதிகளாலா நடக்கிறது. websites-ஐ பார்த்தாலும் நியுஸ் பேப்பரை பார்த்தாலும் தீவிரவாதிகள் தாக்குதல்...தீவிரவாதத்தின் எதிரொலி என்று........

இராக்கில் நடைபெற்று வரும் குண்டு வெடிப்புகளுக்கும் , கொலைகளுக்கும் யார் காரணம்..புஷ்-யே காரணம். இப்பொழுது நடைபெறும் சம்பவங்கள்...2003 முன்னர் இல்லையே..

Saddam -கொன்னாச்சு ஆட்சியும் கவழ்த்தாச்சு...இன்னும் என்ன வேலை அமெரிக்காவுக்கு.... அடுத்தவன் வீட்டு சொத்துக்கு ஏன் இப்படி நாக்க தொங்க போட்டு கொண்டு அலையனும் ..அமெரிக்காவிடம் இல்லாத பணமா இல்லாத சொத்தா? ஏன் இந்த அற்ப ஆசை குணம்...அரக்க குணம்.

ஒரு உயிர் போனால் கூட ஊர் உலகம் தம்பட்டம் அடிக்கும் அமெரிக்கா.....இராகில் தினமும் நூற்றுக்கணக்கான பேரு கொல்ல படுகிறார்களே...அது மனிதாப மானமோ இல்லை மனித நேயமாகவோ தெரிய வில்லையா?

எனக்கு என்னொவொ இராகில் நடைபெறும் எல்லாம் தீவிரவாதமாக தெரியவில்லை...தங்களையும், தன் நாட்டையும் ஆக்கிரமிட்து கொண்டு இருக்கும் அமெரிக்காவின் மீது கொண்ட கோப வெறியே என்று தோன்றுகிறது..

இது என்னொமோ அமெரிக்கவாவின் ஒட்டு மத்த முடிவாகவே தெரியவில்லை...தனி பட்ட ஒரு மனிதனின் எண்ணங்களே இங்கு இராகில் பிரதிபலிக்கின்றன.

என்னிடம் மட்டும் அதிகாரம் இருந்தால் அமெரிக்காவின் பொருளாதரத்துக்கு உலகம் பூரா தடை விதிப்பேன்...இந்த உலகம் இன்னும் 20 வருசம் முன்னால் இருந்த நிலமைக்கு போனாலும் சரி பொருளாதரத்தில்!?. இது புஷ்-ஐ அதிபராக தேர்ந்தெடுத்த அமெரிக்க மக்களுக்கு கொடுக்க படும் தண்டனை மட்டும் அல்ல கை கட்டி காசுக்கு நம் மீதும் பொருளாதர தடை விதித்து விடுவார்களோ என்று பொத்தி கொண்டு தன் வேலையை மட்டும் நல்ல புள்ளையாக பார்க்கும் மற்ற நாடுகளுக்கும் சேர்த்து தான் சொல்கிறேன். இன்னொரு தடவை இது போன்ற தனி விருப்பு வெறுப்பு உள்ள மனிதனை அமெரிக்கா மட்டும் இல்லை (இராக்கும் தான்), எந்த நாட்டு மக்களும் அப்படி பட்ட ஒருத்தரை தேர்ந்தெடுக்க கூடாது.

இதனால் ஒரு புதுசாய் ஆக்கிரமிப்பு இல்லதா உலகத்தை படைக்க வழி வகுப்பேன்...எனக்கு இல்லாத இந்த அதிகாரம் இந்த உலகில் இப்போது யாருக்கு இருக்கிறது?