Monday, May 17, 2010

என் தாய்மண் வேசியான கதை

என் தாய்மண் வேசியான கதை

எனது தாய் மண், நான் பிறந்த இடம், நான் வாழும் மாநிலம், என்னையும் என் மக்களையும் காப்பாற்றும் என் நாடு - அன்னிய முதலாளிகளால், என் நாட்டு சில அரசியல்வாதிகளால், சில அதிகாரிகளின் சுயலாபதிற்காக எனது மண் வேசியாக்கபட்டுள்ளது. இந்த வேசி முழுவதுமாக சீரழிந்து கெட்டு , அழிய போகிறாள் எனும் போது என் நெஞ்சு பதபதைக்கிறது. பணத்துக்காக என் தாய்மண் விற்கபடுகிறது. அன்னிய முதலைகள் இங்குள்ள மக்களாலேயே இந்த மண்ணை, இந்த மண்ணின் வளத்தை, இந்த மண்ணின் தூய நிலத்தடி நீரை, இந்த மண்ணின் தூய சுவாசிக்கும் காற்றை, விலன்கினதின், மனித இனத்தின் சுகாதார தன்மையை கெடுத்துக் கொண்டு இருக்கிறார்கள் எனும் போதும், என் நெஞ்சு பொறுக்குதில்லையே!

அன்னிய முதலாளிகளின் நாடுகளில் கை படாத, கால் படாத பிரதேசங்கள் உண்டு. அங்கு இயற்கை வளம், நீர்வளம், தூய காற்று, நல்ல சுற்றுபுற சூழ்நிலை எல்லாமே நன்றாக உள்ளது. ஆனால் என் மண்ணில், குடிக்க நல்ல தண்ணிர் இல்லை. சுவாசிக்க நல்ல காற்று இல்லை, என் சுற்றுபுறம் தூமையாக இல்லை. ஒரு லிட்டர் தண்ணீர் 10 ருபாய் 20 ருபாய் கொடுத்து வாங்க வேண்டிய நிலை. இந்த அநியாயம் அன்னிய நாடுகளில் உண்டா.? அங்கு சமையல் அறையில், குளிக்கும் அறையல், பொது இடங்களில் வரும் தண்ணீர் -எல்லாமே ஒன்று தான். எந்த தண்ணீர் வேண்டுமானாலும் குடிக்கலாம். ஆனால் இங்கு?

பணத்திற்காக - ஆமாம் வேலை இல்லாத இந்த மக்களுக்கு வேலை வேண்டும் என்பதற்காக, தொழில் வளம் பெருக்குகிறோம் என்று நினைக்கும் அரசியல்வாதிகளும், இந்த மாநில, மத்திய அரசும், குறைவாக செலாவாகும் என எண்ணும் அன்னிய முதலாளிகளும் எதைப் பற்றியும் கவலை படாமல் பணம் ஒன்றே குறிகோளாக - எனது மண்ணை, எங்களது நிலத்தை மாசுப் படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

பணத்தை தூக்கிப் போட்டு, எங்களது இயற்கை வளங்களை கெடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். இல்லை அதற்கு சரியான தீர்வை முழுமையாக செயல்படுத்தாமல் இருக்கிறார்கள். எங்களது கண் முன்னே , அரசியல் வாதிகளின் கண் முன்னே, இந்த அரசின் கண் முன்னே இந்த தாய்மண்ணை சீரழித்துக்கொண்டு இருகிறார்கள். கேப்பார் யாரும் இல்லை. கேட்டலும் அதை யாரும் பொருபடுத்த வில்லை. வாழ முதன்மையானது குடிநீர். அதுவே மாசு பட்டு கிடக்கிறது. மாசு பட்ட நீரும் கிடப்பதில்லை இப்போது. நாளைய சமுதாயம் நல்ல தண்ணீர் இன்றி தவிக்க போகிறது. காசு இருபவர்கள், தண்ணீரை விலைக் கொடுத்து வாங்கி குடிப்பார்கள், குளிப்பார்கள்.

நாளய சமுதாயமே, நாளை, எதிர் காலத்தில், இந்த அரசங்கமோ இல்லை வெளி நாட்டு/அன்னிய நாட்டு முதலாளிகளோ தண்ணிர் விற்க போகிறார்கள் கூவி கூவி. ஒரு லிட்டர் ஒரு ருபாய், ஒரு லிட்டர் பத்து ருபாய் , அம்பது ருபாய், நூறு ருபாய் என்று. இந்த அரசாங்கமும் கடலில் இருந்து தண்ணீர் எடுத்து ஒரு லிட்டர், ஒரு குடம் பத்து ருபாய், இருபது ருபாய் என்று விற்க போகிறது. அதற்க்கும் அதையம் பணம் கொடுத்து வாங்கும் மக்களாக நாம் தள்ள படுவோம்......

அன்னிய நாடுகள் அழகாக, கை படாத கண்ணியா இருக்க வேண்டும். அவர்கள், அவர்களின் நாடுகளின் வளங்கள் குறைய கூடாது, கெடக் கூடாது.

ஆனால் என் நாட்டின், இந்த மண்ணின் வளத்தை கெடுக்கலாம். அழிக்கலாம். என் தாய் மண்ணை கெடுத்து, வேசியாக்கி, சீரழிக்க நினைக்கிறார்கள் - நாளைய தினங்களில் என் தாய் மண்ணின் வளம் முழுவதுமாக - பணதிற்க்கா அழிக்கப்படும். நாம் எல்லோரும் மனதை மூடி, கண்களை திறந்து பார்த்துக் கொண்டு இருக்கிறோம். இருப்போம்......


மன சாட்சியாவது மண்ணாங்கட்டியாவது.....நமக்கு!