Friday, April 13, 2007

கேவலமா இருக்கு

ஒரு தனி பட்ட மனிதனை பற்றியது. தனிபட்ட மனிதர்களை பற்றி பேச எனக்கு தகுதி இல்லை மனித நாகரிகத்தை நாம் கையில் எடுத்துகொண்டு பேசும்போது ...இருந்தாலும் என் நோக்கம் இது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்கவும், புரியாதவர்கள், தெரிந்து கொள்ளவும் ஒரு சந்தர்ப்பம் - இது ஒரு செய்தியாகவே இருக்கட்டும் என்று.


இது அட நம்ம ஐஸ் பற்றியும், அபிஷ்சேக் பற்றியும். நிறைய கேள்விகளும் சந்தேகங்கலும் மனதில் எழுகின்றன. ஐஸ் இதற்கு முன்னாடி ரெண்டு மூன்று பேரை காதலித்து... இருக்கிறார் என்று.

இப்படி இருக்கையில், எப்படி அபிசேக் - ஆல் ஒத்து கொள்ள முடிகிறது காதலையும் சரி, கல்யாணமும் சரி. இந்திய மக்களும்(?), ரசிகர்களும், அவர் மீதும், அமிதாப்பச்சன் குடும்பத்தின் மீது வைத்து இருக்கும் மதிப்பு என்ன வாகும்?,

இல்லை வாய் கிழிய பேசும் சிலரின் இந்திய கலாச்சாரம் , பண்பாடு ....என்ன வாகும், அது சரியா.?

இல்லை அபிசேக் மட்டும் என்ன இதற்கு முன்னே யாரையும், "காதலிக்க" வில்லையா? என் கேள்வி எழ தான் செய்கிறது.

இல்லை உண்மையிலேயே ரசிகர்களும் , மற்றவர்களும் இதை பற்றி கவலை படுகிறார்களா?

இந்த காதல் உள்ளங்களின் எண்ணம் தான் என்ன?
-இது என்ன புகழுக்காகவா?
-இல்லை பணத்துக்காகவா
-இல்லை அழகுக்காகவா
-இல்லை ஆசைக்காகவா
-இல்லை இனம் புரியாத உணர்வுகளுக்காகவா?

எது எப்படியாக இருந்தாலும் அவர்களின் முடிவுகள் தனிபட்டவையாக இருந்தாலும் , இப்படி பட்ட சம்பந்தங்கள் சரியாதனவாகவே படவில்லை. இவர்கள் கடந்த காலங்களை பற்றி கவலை பட்டதாக , கணக்கில் எடுத்து கொண்டதாக தெரிய வில்லை. இவர்களை ஒரு உதாரணத்திற்க்கே எடுத்து கொண்டு இருக்கிறேன், இவர்களை பற்றி எல்லோருக்கும் தெரியும் என்பதால். இவர்களை போன்று எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள். இது எல்லாம் ஒரு பொருட்டாகவே பட வில்லை.

என்னை பொருத்தவரையில் நல்ல கண்ணோட்டத்தில் பார்த்தாலும் சரி, தப்பான கண்ணோட்டத்தில் பார்த்தாலும் சரி, சில விசயங்கள் தப்பானவைகள் என்றால், தப்பு தான் இந்திய கலாசாரத்தையும், மனித நாகரிக்கத்தையும் மனதில் நினைக்கும் போது.

இங்கு நான் காதல் என்று சொல்லி இருப்பது மரியாதை நிமத்தமாகவே அந்த வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறேன்.

இதை எல்லாம் சொல்ல எனக்கு கேவலமாக இருக்கிறது. இது எல்லாம் ஒரு பொழப்பா என தோணுது